தர்மபுரி, ஆக. 27: தர்மபுரி மாவட்டம், மாரண்டள்ளி அருகே கரியக்குட்டனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி லட்சுமி (60). இவர் நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், திடீரென லட்சுமியை தகாத வார்த்தையால் திட்டி, தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இதுகுறித்து லட்சுமி மாரண்டள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த ஆண்டிமுத்து (29), மருதன் (24) ஆகிய இருவரும் லட்சுமியை திட்டி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆண்டிமுத்துவை கைது செய்து, தலைமறைவான மருதனை போலீசார் தேடி வருகின்றனர்.