மானாமதுரை, ஆக.6: மானாமதுரை அருகே கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த வீரையா மனைவி பிச்சையம்மாள்(63). இவர், கீழப்பசலை ரோட்டில் உள்ள அரசு துவக்க பள்ளி அருகே இருக்கும் வேப்ப மரத்தின் கீழே வேப்ப விதைகளை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இரண்டு வாலிபர்கள் அவரை கத்தியை காட்டி மிரட்டி அவரது வாயை சேலையால் கட்டி வைத்து காதில் கிடந்த தங்க தோடு, மோதிரம் உள்ளிட்ட இரண்டு சவரன் நகைகளை பறித்து சென்றனர். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மூதாட்டியிடம் நகை பறிப்பு
previous post