சிவகாசி, மே 31: வீட்டியில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகாசி அருகே பாறைபட்டி கண்ணன் கோவிலை சேர்ந்தவர் ஜானி(88). இவர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் இவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் இருந்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஜானியிடம் மர்மநபர் 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் மாரிமுத்து தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.