பவுன் நகை அபேஸ்சேலம்: ஓமலூர் அருகேயுள்ள செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ மனைவி பார்வதி (60). இவர் கடந்த 16ம் தேதி, சேலம் டவுனுக்கு வந்திருந்தார். பின்னர், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து ஓமலூர் செல்வதற்காக, அரசு டவுன் பஸ்சில் ஏறிச் சென்றார். கருப்பூர் பகுதியில் சென்ற போது, பார்வதி கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் நகையை காணவில்லை. மர்மநபர் அதனை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி கருப்பூர் போலீசில், பார்வதி புகார் கொடுத்தார். அதன் பேரில், எஸ்ஐ சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.