கேடிசி நகர், பிப்.28: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது அவர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது. இதில் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த மாணவர் சுதன் நித்தியானந்தன் மற்றும் 2 மாணவிகள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், விபத்தில் பலியான மாணவர் சுதன் நித்தியானந்த் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, ஏர்வாடி நகர காங்கிரஸ் தலைவர் ரீமா பைல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூணாறு விபத்தில் பலியான ஏர்வாடி மாணவர் குடும்பத்தினருக்கு ராபர்ட் புரூஸ் எம்பி நேரில் ஆறுதல்
0