திருவண்ணாமலை, பிப். 20: கீழ்பெண்ணாத்தூர் தாலுகா ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். விவசாய கூலி தொழிலாளி. அவரது மனைவி கீதா. இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள். இந்நிலையில், இவர்களது 11 மாத பெண் குழந்தை கடந்த சில நாட்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.நேற்று அதிகாலை தொடர்ந்து குழந்தை அழுததால், தாய் கீதா பாலூட்டி உள்ளார். அப்போது, திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குழந்தையை அழைத்து சென்றனர். குழந்தையின் உடல்நிலை மோசமாக இருந்ததால், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதை உறுதி செய்தனர். இது தொடர்பாக, மங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூச்சு திணறி 11 மாத பெண் குழந்தை பலி திருவண்ணாமலை அருகே
0
previous post