புளியங்குடி, நவ.2: புளியங்குடி அருகே முள்ளிகுளத்தில் புதிய குடிநீர் தொட்டியை முள்ளிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் திறந்து வைத்தார்.புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்குளம் மேட்டு பச்சேரியில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக வெகு தூரம் வரவேண்டியுள்ளது. அதனால் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் தங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து தரும் படி கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து முள்ளிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஊராட்சி நிதியில் இருந்து 1000 லிட்டர் குடிநீர் தொட்டி அமைத்து அதனை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நல பணியாளர் சின்ன செங்கான், ஊராட்சி உறுப்பினர் ஜோதி, பணிதள பொறுப்பாளர் அமுதா, அரசகனி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பாண்டி, ஆறுமுககுமார், சாமுவேல், பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.