கறம்பக்குடி, மே 30: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் முள்ளங்குறிச்சி ஊராட்சி அமைந்துள்ளது இந்த ஊராட்சியில் பல்வேறு கிராமங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, சூரக்காடு கிராமத்தில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தினந்தோறும் சூரக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து வெளியூருக்கு சென்று வருகின்றனர்.அனைத்து தரப்பினர்களின் நலன்கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சூரக்காடு பேருந்து நிறுத்த நிழற்குடை ஆனது, தற்போது மிகவும் பராமரிப்பின்றி எந்த நேரத்தில் இடிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.
எனவே சூரக்காடு பேருந்து நிறுத்த நிழற்குடை பழுதடைந்து காணப்படுவதால் எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. இதனால் பழுதடைந்த பேருந்து நிறுத்த நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி அதே இடத்தில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்து தர வேண்டுமென சூரக்காடு கிராம அனைத்து தரப்பினரும், அரசுக்கும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.