கருங்கல், ஆக.29: முள்ளங்கினாவிளை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள, தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த 11 அரங்குகளையும் பார்வையிட்டார். கோரிக்கை மனுக்களுடன் வந்த மக்களின் குறைகளையும் கேட்டறிந்ததோடு, உடனே அவற்றை நிவர்த்தி செய்ய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு வட்டாட்சியர் ராஜேஷ், முள்ளங்கினாவிளை ஊராட்சி மன்ற தலைவர் பிரபா, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, பங்குதந்தை ஆன்றுரூஸ் மற்றும் பொதுமக்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முள்ளங்கினாவிளை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
previous post