செய்முறை முருங்கைக்காயை வேகவைத்து அதன் சதைப்பற்றை நீக்கி தனியாக
வைக்கவும். புளியை ரசத்திற்கு கரைப்பது போல் கரைக்கவும். அதில் தக்காளியை
சேர்த்து நன்கு பிசையவும். அதில் வரமிளகாயை கிள்ளி போடவும். கறிவேப்பிலை,
கொத்தமல்லி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்க்கவும். துவரம் பருப்பை வேகவைத்து
அதன் தண்ணீரை மட்டும் புளிக்கரைசலுடன் சேர்க்கவும். மிளகு, சீரகம், பூண்டு
தட்டி சேர்க்கவும். இதனுடன் முருங்கைக்காய் சதைப்பற்றை சேர்த்து நன்கு
கலக்கவும். கடாயில் எண்ணை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில்
கரைத்த புளிக்கரைசலை சேர்க்கவும். நுரைக்கட்டி வரும் போது கொத்தமல்லித் தழை
சேர்த்து இறக்கவும்.
முருங்கை ரசம்
88
previous post