திருத்துறைப்பூண்டி மார்ச் 27: முருங்கைப் பெயரில் மரப்பட்டை தொலைப்பான் கட்டுப்படுத்தும் வழிமுறை பற்றி திருத்துறைப்பூண்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் தகவல் தெரிவித்துள்ளதாவது: இன்டார்பெலா டெட்ராயோனிஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட பூச்சி முருங்கை மரத்தில் துளையிட்டு மிகுந்த பொருளாதார சேதத்தினை ஏற்படுத்துகிறது. தாக்குதலின் அறிகுறிகள்: மரச்சக்கைகளும், புழுவின் சிறுசிறு-உருண்டையா கழிவுப்பொருட்களும் கொண்ட வல்லிய நூலாம்படை மரப்பட்டையின் மீது வளைந்தும் நீளமாகவும் காணப்படும்.
பூச்சியின் விபரம்: நீளமாகவும், அழுக்கான பழுப்பு நிறத்துடனும், கருமையான தலையுடன் இருக்கும்.
பூச்சி: வெளிர் பழுப்பு நிறத்துடன் இருக்கும். முன்இறக்கைகள் பழுப்பு நிறப்புள்ளிகளையும், வளர்ந்த கோடுகளையும் கொண்டிருக்கும். பின்இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை: முருங்கை நடவு செய்த வயலை களைகளின்றி சுத்தமாக பராமரித்தல் வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்தில் பட்டையிலுள்ள பூலாம்பட்டையை சுத்தம் செய்து விட்டு வேப்பெண்ணை கரைசல் அல்லது பெட்ரோல் நனைத்த பஞ்சை கொண்டு பட்டையில் உள்ள துளையை அடைக்கவும் அல்லது சேறு கொண்டு அடைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றார்.
முருங்கையில் மரப்பட்டை துளைப்பான் கட்டுப்படுத்தும் வழிமுைற தோட்டக்கலை துறை அதிகாரி விளக்கம்
0