கலசபாக்கம், ஜூன் 10: கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் பிரசித்தி பெற்ற 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. முருகப்பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் நாளில் முருகனை அனைவரும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வருகை தந்து விரதம் இருந்து வழிபட்டனர். அதேபோல் திருமணம் ஆகாத பெண்கள் நேற்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் முருகனை வழிபட்டனர். வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் முருகப்பெருமான் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் வைகாசி விசாக விழாவினை ஒட்டி பால முருகனுக்கு பாலாபிஷேகத்தை தொடர்ந்து முருகப்பெருமாள் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முருகர் கோயில்களில் வைகாசி விசாக சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் கலசபாக்கம், செய்யாறில்
0