ஈரோடு, ஜூன் 10: பாரதீய மருந்து மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்கத்தினர் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மருத்துவ பிரதிநிதிகள் மத்திய அரசு மருத்துவமனைகளுக்குள் நுழைவதை தடை செய்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, தொழில் செய்யும் உரிமை யாருக்கும் உள்ளது எனு பட்சத்தில் எந்தவொரு ஆவணமும் இல்லாமல் இவ்வாறு தடை வித்திப்பது நியாயமற்றது.எனவே இத்தடை உத்தரவை நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.