சென்னிமலை,செப்.3: அமாவாசை தினத்தை முன்னிட்டு நேற்று சென்னிமலை முருகன் கோயிலில் அதிகாலை 5.45 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோமாதா பூஜை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து வழக்கம்போல நடைபெறும் 6 கால பூஜைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதே போல சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் ஆதித்யா நகரில் உள்ள நர்மதை மருந்தீஸ்வரர் கோயிலில் நர்மதை மருந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.அப்போது சிறப்பு அலங்காரத்தில் நர்மதை மருந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.