கிருஷ்ணகிரி, ஆக.18: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ் தலைமை வகித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லாம், பாலன், நாகராசன், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அறிஞர், சுப்பிரமணி, சாந்தமூர்த்தி, பர்கூர் பேரூர் செயலாளர் வெங்கட்டப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், துணை அமைப்பாளர் ராஜசேகர், ஐ.டி. விங் விஜய் ராஜசேகர், நிர்வாகிகள் ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முரசொலி மாறன் பிறந்த நாள் விழா
previous post