தேவதானப்பட்டி, ஆக. 25: தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ராமன் மகன் கணேசன்(24). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பவித்ரன்(25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கணேசன் பொம்மிநாயக்கன்பட்டி ரோடு தனியார் தோட்டத்தில் அருகே உட்கார்ந்து இருந்துள்ளார். அங்கு வந்த பவித்ரன் மற்றும் மாரிமுத்து, வசந்த், ரிஷிகேஸ்வரன் ஆகியோர் கணேசன் தாக்கி, கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பலத்த காயமடைந்த கணேசன் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் 4பேர் மீது வழக்கு பதிவு செய்து மாரிமுத்து மற்றும் ரிஷிகேஸ்வரன் ஆகியோரை கைது செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.