Tuesday, June 25, 2024
Home » முன்விரோத தகராறில் வீட்டை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை

முன்விரோத தகராறில் வீட்டை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை

by Ranjith

 

தர்மபுரி, மே 25: தர்மபுரி மாவட்டம், ஏ.கொல்லஅள்ளி அருகே குளியனூரைச் சேர்ந்த காஞ்சனா(40) என்பவர், நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2 மாதங்களுக்கு முன், எங்கள் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. இதுதொடர்பாக எங்களுக்கும், பக்கத்தில் உள்ளவர்களுக்கும் இடையே வாய் தகராறு நடந்தது. இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை செய்து சமரசம் செய்தனர்.

கடந்த 18ம் தேதி எங்களது கிராம வாட்ஸ்ஆப் குழுவில், எனது குடும்பத்தையும், எனது கணவரின் உறவினர் குடும்பத்தையும் ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளதாக சிலர் பதிவிட்டனர். மேலும், எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவிலும் விலக்கி வைத்தனர். இதை தட்டிக் கேட்ட எனது கணவர் பூதாளன், அவரது அண்ணன் சின்னமூக்கன், அவரது மருமகள் கற்பகம், மகள் சரண்யா ஆகியோரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம்.

இதற்கிடையே, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிலர் எங்கள் வீட்டையும், உறவினரான சின்னப்பையன் என்பவரது வீட்டையும் அடித்து நொறுக்கி, கதவுகளை சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக நான் கொடுத்த புகாரை, மதிகோன்பாளையம் போலீசார் பதிவு செய்யவில்லை. மேலும், ராசிபுரத்தில் படித்துக்கொண்டிருக்கும் எனது மகன்கள் மேல் வழக்கு பதிவு செய்வோம் என போலீசார் கூறுகின்றனர். எனவே, மாவட்ட எஸ்பி இந்த மனுவை தீர விசாரித்து, எங்களை தாக்கி, வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi