வேலூர், ஜூலை 7: வேலூரில் முன்விரோத தகராறில் வாலிபரை சரமாரி தாக்கிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர். வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்(25), கூலித்தொழிலாளி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சதீஷ்(எ)யூசுப்கான்(23), இவரது அண்ணன் செந்தில்(எ)ஆசிப்(25) ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் ஞானசேகரன், போதையில் தள்ளாடியபடி தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது வழியில் இருந்த சதீஷ்(எ)யூசுப்கான், செந்தில்(எ)ஆசிப் ஆகியோர் ஞானசேகரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும் கற்களால் சரமாரியாக ஞானசேகரனை தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.