கிருஷ்ணகிரி, ஆக.30: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023 ஆண்டிற்கான இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு இடஒதுக்கீட்டின்படி, 120 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமும் தகுதியுமுள்ள முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnusrb.tn.gov.in என்ற இணையவழி வாயிலாக வரும் செப்டம்பர் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரம் பெற 04343-236134 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.