நாமக்கல்,மார்ச் 6: நாமக்கல்லில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் குடும்பத்தை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், நாளை 7ம் தேதி, காலை 10 மணிக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிய உள்ளார். எனவே, நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தை சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணி புரியும் படைவீரர்களின் குடும்பத்தார், தங்களின் கோரிக்கை மனுக்களை 2 பிரதிகள் எழுதிக் கொண்டு வந்து கலெக்டரிடம் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவத்தினர் சிறப்பு குறைதீர் முகாம்
0
previous post