விருதுநகர், ஜூலை 2: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்க்கும் முகாமை கலெக்டர் சுகபுத்ரா ேநற்று தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளாக இன்றும் முகாம் நடைபெறுகிறது.
நேற்று துவங்கிய முதல் நாள் முகாமில் முன்னாள் படைவீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி உயிர்சான்று சமர்ப்பிக்கப்பட்டு கலெக்டரால் முன்னாள் படைவீரர்கள் சான்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.