திண்டுக்கல், மே 28: கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லத்தில் தங்குவதற்கு முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் முன்பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள முன்னாள் படைவீரர் ஓய்வு இல்லமானது மே 23 முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, கொடைக்கானல் ஓய்வு இல்லத்தில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் exweldgl@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பம் மற்றும் விபரங்களை அனுப்பி பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, முன்னாள் படைவீரர் நல அலுவலக தொலைபேசி எண்: 0451-2460086 வாயிலாக அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.