சங்கரன்கோவில், ஜூலை 17: சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி மாநில துணைச்செயலாளருமான ராஜலட்சுமி முன்னிலையில் மதிமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி இளைஞரணி நகர துணை அமைப்பாளரான நயினார் முகமது தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். மதிமுகவைச் சேர்ந்த முன்னாள் வார்டு செயலாளர் சுரேஷ், 16வது வார்டு ஹக்கீம் சேட், 20வது வார்டை சேர்ந்த முகமது அஜிப், அப்துல் மஜீத், அப்துல் காதர் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அதிமுக மாவட்ட பொருளாளர் சண்முகையா, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் பரமகுருநாதன் நகர ஜெ பேரவை செயலாளர் சௌந்தர், மாணவரணி மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி முன்னிலையில் சங்கரன்கோவிலில் மதிமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்
44
previous post