நாகர்கோவில், அக்.16 : குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக சமீபத்தில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. இதில் அதிமுகவில் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சைமாலுக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்பட வில்லை.
இந்த நிலையில் அவரை வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட பொறுப்பாளராக நியமித்து கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்பார்வையிடுவதற்காக இந்த பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.