முத்துப்பேட்டை, ஜூன்.18: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தேர்வு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய கங்காதரன் பணியிடம் மாற்றம் பெற்று நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்கு சென்றதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த இளவரசன் முத்துப்பேட்டை தேர்வு நிலைப் பேரூராட்சி புதிய செயல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார், புதிதாக பொறுப்பேற்ற இளவரசனுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் மற்றும் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முத்துப்பேட்டை பேரூராட்சி புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு
0