முத்துப்பேட்டை, ஆக. 19: முத்துப்பேட்டை அருகே உப்பூர் ஊராட்சி கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டயில் கடந்த 16ம் தேதி தொட்டி மேல்புறம் யாரோ மர்ம நபர்கள் நெல்லில் விஷம் கலந்து வைத்தததால் அங்கு வந்த 7 புறாக்கள் சாப்பிட்டு உயிர் இழந்தது.இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன், நேற்று காலை மீண்டும் மர்ம நபர்கள் அதேபோன்று நெல்லில் விஷம் கலந்து வைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் பறவை எதுவும் சாப்பிட வில்லை.தகவலறிந்து வந்த முத்துப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களை சமாதனம் செய்தார். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.