முத்துப்பேட்டை, ஜுன் 11: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று பாலர் சபை துவக்க விழா நடைப்பெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.முருகேசன் தலைமை வகித்தார். அதனை தொடர்ந்து பாலர் சபை தொடங்கப்பட்டது. தில் முதலமைச்சராக வீரனேஸ்வரனும், துணை முதலமைச்சராக ரிஷிகேசனும், கல்வி அமைச்சர்களாக கோகுல், நிவாஷினியும், பாதுகாப்பு அமைச்சர்களாக லட்சயன், ஹரிசும், சுகாதார அமைச்சராக சூர்யா ராஜா, தேஜாயும், உணவு அமைச்சராக ஹரிணி,
சபரிமணியும், விளையாட்டு அமைச்சராக நேகா, சண்முக பிரியனும், நீர்வள அமைச்சராக சின்னா, சிவதாரணியும், எதிர்க்கட்சித் தலைவராக தவயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் பொறுப்புகளையும் அவர்களை வாழ்த்தியும் ஆசிரியர்கள் தமிழரசி, உதயா, பாரதி, கருணாநிதி, சீனிவாசன், காவியா மற்றும் பிரியா ஆகியோர் பேசினர். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.