முத்துப்பேட்டை, மே 31: முத்துப்பேட்டை அருகே ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில்பெண் பயணியின் கால் துண்டானது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வடசங்கேந்தி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் மனைவி சுந்தரி(45) இவரும் இவரது உறவினர் சுமதியும் ஒரு ஆட்டோவில் வடசங்கேந்தியிலிருந்து வாங்கத்தான்குடி கிராமத்திற்கு சென்றனர்.அப்போது புறப்பட்ட சென்ற சற்று தூரத்தில் குறுகிய சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது முன்பு டிராக்டர் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது அப்போது ஆட்டோ ஓட்டுனர் மணிமாறன் டிராக்டரை முந்தி செல்ல முயன்றபோது டிராக்டரின் பின் பகுதியில் மோதியது.