முத்துப்பேட்டை, ஆக. 31: அரசுபள்ளி மாணவர்களுக்கு மஞ்சள்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் செங்காங்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை தவிர்த்து அனைவரும் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் தலைமை வகித்தார். சாசன தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
முன்னதாக முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் கோவி.ரெங்கசாமி வரவேற்றார். ரோட்டரி தலைவர் சாகுல் ஹமீது மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கி இனி பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை தவிர்த்து அனைவரும் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்துவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் முன்னாள் தலைவர்கள் ராமமூர்த்தி, சபாபதி, கண்ணதாசன், ராஜ்மோகன், செயலாளர் பத்மநாதன், நிர்வாகிகள் கிஷோர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.