முத்துப்பேட்டை, ஜூலை 5: முத்துப்பேட்டையில் 2025-2026ம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசால் புதிதாகத் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு ஒரு வார கால பயிற்சி திட்டம் நடைப்பெற்று வருகிறது நேற்று 3- நாள் நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமன் தலைமை வகித்தார், முத்துப்பேட்டை, காவல் நிலைய காவல் ஆய்வாளர் கழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போதை பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.
முத்தப்பேட்டை பிற்பட்டோர் நலத்துறை விடுதி காப்பாளர் ஆனந்தி விடுதியில் தங்கி பயிலும் வாய்ப்பகள் பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் வரலாற்றுத்துறைத்தலைவர் ராஜாமுகமது நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் மாணவர்களின் சமூக பொறுப்பு இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றைப் பற்றி மாணவ மாணவிகளுக்கு கருத்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆங்கிலத்துறைத் தலைவர் பாக்கியலெட்சுமி வருகைப்பதிவு கணக்கிட்டு முறைகள் மற்றும் மாணவர்களின் நன்னடத்தை விதிகள் பற்றி அறிவுரைகள் வழங்கினார். இறுதியாக இக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் அருணகிரி நன்றி கூறினார்.