முத்துப்பேட்டை, ஆக. 20: முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள மகாகாளி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளி அம்மன் வீரமாகாளி அம்மன் பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆவணி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்பாளுக்கு பால்குட அபிஷேகம் தீபாராதனை நடத்தப்பட்டது.
மாவிளக்கு போடுதல் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்காரம் செய்து அம்பாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.