முத்துப்பேட்டை, ஜுலை 7: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை வனிதா தலைமை வகித்தார். இதில் மாணவிகள் மத்தியில் போதை பொருள்கள் குறித்தும், அதன் தீமைகள் குறித்தும், போதை பொருட்களால் குடும்ப சூழல் சிதைவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மாணவிகளுடன் ஆசிரியைகள் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர.