முத்துப்பேட்டை, ஜூலை 6: முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் அருள்மிகு பெரியநாயகி கோயில் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது, இப்போட்டியினை பள்ளி தலைமையாசிரியை வனிதா துவங்கி வைத்தார், இதில் போட்டிகள் 3 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் 6 முதல் 8 -ஆம் வகுப்பு, 9 மற்றும் 10- ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு, என தனித்தனியாக நடைபெற்றது. நிறைவாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இதில் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களைப்பெற்ற மாணவிகள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டதாக பள்ளி தலைமையாசிரியை வனிதா கூறினார்.