சிவகங்கை, ஆக. 3: சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) முத்து தலைமையில், தொழிலாளர் துறை அலுவலர்கள் நாட்டரசன்கோட்டை, கோவிலூர் மற்றும் வாணியங்குடி வாரச்சந்தைகளில் ஆய்வு செய்தனர். இதில் முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் 21, மேஜை தராசு-7, விட்டத்தராசு-7, இரும்பு எடைகற்கள்-31 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-20 என மொத்தம் 86 எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.