உடன்குடி, ஜூலை 16: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தமிழ்மாத கடைசி வெள்ளி தோறும் மாவிளக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஆனி மாத கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு காலை 6மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30மணிக்கு 108 மாவிளக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.