மானாமதுரை, செப். 6: மானாமதுரை அருகே முத்தனேந்தல் – மிளகனூர் சாலை விரிவாக்கப் பணிக்கு ரூ.3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் முத்தனேந்தலில் இருந்து கட்டிக்குளம் வழியாக மிளகனூர் செல்லும் சாலை குறுகியதாக உள்ளது. இந்த சாலையில் தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென ெபாதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ரூ.3 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மானாமதுரை உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் ராமநாதன் ஆகியோர் கூறியதாவது: மானாமதுரை உட்கோட்டம் முத்தனேந்தலில் இருந்து கட்டிக்குளம் வழியாக மிளகனூர் செல்லும் ஒருவழி சாலையை இருவழித்தட சாலையாக மாற்ற ரூ.3 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன. இதன் மூலம் கட்டிக்குளம், முல்லைக்குளம், குவளைவேலி உள்ளிட்ட கிராம மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற உள்ளது என்று தெரிவித்தனர்.
முத்தனேந்தல்-மிளகனூர் இடையே சாலை விரிவாக்கப் பணிக்கு ₹3.10 கோடி நிதி ஒதுக்கீடு
previous post