கிருஷ்ணகிரி, ஆக.17: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில், முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான பொதுக் கலந்தாய்வு வருகிற 20ம் தேதி நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பாடப்பிரிவுகள் எம்ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு,பொருளியல்), எம்.எஸ்சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) ஆகியவற்றிற்கு இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கு, வருகிற 20ம் தேதி முதுநிலை சேர்க்கைப் பொதுக்கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வின் போது மாணவர்கள் தங்களது ஆன்லைன் விண்ணப்ப படிவம், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், மார்பளவு புகைப்படங்கள் (4), ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தக முதல் பக்க நகல் ஆகிவற்றுடன் கலைப்பிரிவுக்கு ₹1760, அறிவியல் பிரிவிற்கு ₹1820, கணினி அறிவியல் பிரிவிற்கு ₹2020 சேர்க்கைக் கட்டணமாக தவறாமல் எடுத்து வரவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 20ம் தேதி பொது கலந்தாய்வு
previous post