தர்மபுரி, செப்.6: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.இதில், மாவட்ட செயலாளர் பாக்யராஜ், கலைவாணன், மாநில துணைத்தலைவர் கலைவாணன், மாவட்ட பொருளாளர் பூபால், முருகன், வெற்றிவேல் செல்வன், அரவிந்தன், சிவசக்தி, மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.