ஈரோடு, செப்.2: ஈரோட்டில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். பொதுசெயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில், தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆசிரியர் தினமான வருகிற 5ம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொடர்ந்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட கூட்டமைப்பில் இணைந்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மொடக்குறிச்சி, செப்.2: மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட ஊஞ்சப்பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி கலந்து கொண்டு, கட்டுமான பணியை பூமி பூஜை செய்து வைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் செல்வாம்பாள் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், வடக்கு ஒன்றிய தலைவர் கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.