ஊத்தங்கரை, செப்.6: முதுகுத்தண்டு பாதிப்பு தினத்தை முன்னிட்டு ஊத்தங்கரையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியில், முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட நபர்கள், மூன்று சக்கர வாகனத்தில் பங்கேற்றனர். ஊத்தங்கரை டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து காவலர் கோவிந்தன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். முதுகுத்தண்டு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு குறித்தும், தலைக்கவசம் மற்றும் உயிர்க்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், அதிவேகமாக வாகனம் ஓட்டக்கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, விபத்து ஏற்பட்டால் உடனடியாக 108க்கு தகவல் கொடுக்க வேண்டும், முதுகுத்தண்டு பாதிப்பு என்பது ஒரு வாழ்நாள் பாதிப்பாகும். எனவே, விபத்துகளை தவிர்ப்பது மிகவும் அவசியம் என பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பேரணியில், ஊத்தங்கரை போலீசார், முதுகுத்தண்டு பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.