சேந்தமங்கலம், ஜூன் 5: சேந்தமங்கலம் ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்த நாளை முன்னிட்டு, சேந்தமங்கலம் அரசு மகளிர் பள்ளி எதிரே உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் தனபாலன் முன்னிலை வகித்தார். விழாவில், கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு, முதியோர் இல்லத்தில் உள்ள 80 பேருக்கு அசைவ உணவை வழங்கினார். நிகழ்ச்சியில், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் திமுக செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ராணி, தொகுதி ஐடி ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், திமுக நிர்வாகிகள் கதிர்வேல், பெரியசாமி, ஸ்டாலின், கர்ணன், கவின், கடல் வீரன், சாம் சம்பத், முகமது ரபீக், கோபி, சூர்யா, பிரவீன், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதியோர் இல்லத்தில் மதிய உணவு
0
previous post