சிவகாசி , ஜூலை 21: சிவகாசி அம்மன் கோவில் பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி(60). இவரது மனைவி, மூன்று பிள்ளைகள் சென்னையில் வசித்து வருகின்றனர். அந்தோணி நிலையில் இங்கு டீக்கடை நடத்தி வந்தார். பிள்ளைகளை விட்டு பிரிந்து கஷ்டமாக இருக்கிறது என புலம்பி வந்தார். இந்நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.