செய்துங்கநல்லூர், செப். 3: மதுரை மாவட்டம் ஜெயந்தி நகரை சேர்ந்தவர் மணிமாறன் (60). மதுரையில் உள்ள பேக்கரியில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மணிமாறன், அவரது மனைவியிடம் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு செய்துங்கநல்லூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியன் சாஸ்தா கோயிலுக்கு வந்துள்ளார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் மனவிரக்தியில் இருந்த மணிமாறன், கோயில் பகுதியில் பூச்சிமருந்து குடித்து இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவர் தற்கொலை
previous post