திருப்பூர்,மே24: திருப்பூர், கொடுவாய், மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (64). இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சந்திரசேகருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. இதனால் அவருடைய வீட்டை விற்று கடன் கட்டலாம் என நினைத்து வீட்டிற்கு விலை பேசி கொண்டிருந்தார். அப்போது சந்திரசேகரும் அவருடைய சகோதரிக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சந்திரசேகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.