Sunday, April 14, 2024
Home » முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மீண்டும் பேட்டரி கார்கள் அவசியம்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மீண்டும் பேட்டரி கார்கள் அவசியம்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

by Ranjith

 

மதுரை, பிப். 17: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் சிரமப்படுவதால், அவர்களின் வசதிக்காக மீண்டும் பேட்டரி கார்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடக்கின்றன. தற்போது மாசி திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரரை தரிசிக்க பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்காண பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் கோயிலை சுற்றிப் பார்க்க குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோருக்கு என தனித்தனி கட்டணத்தில் 5 பேட்டரி கார்கள் இயக்கப்பட்டன. 4 கோபுர வாசலில் நிறுத்தப்பட்டு, கோயிலை சுற்று ஒரு முறை வந்து ஏறிய இடத்தில் இறக்கி விடுவார். இந்த பேட்டரி கார்களுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சில ஆண்டுகளாக பேட்டரி கார்கள் இயக்கப்படாமல் மாநகராட்சி வாகன பணிமனைக்குள் முடங்கி கிடக்கிறது. மீண்டும் கார்களை இயக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சித்திரை வீதி ரோடுகளில் கற்ங்கற்கள் பதிக்க பேட்டரி கார்கள் நிறுத்தப்பட்டன. அதன்பின்னர் பேட்டரி கார்கள் இயக்கப்படவில்லை. இதனால், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்தில் உள்ளனர். எனவே, நிறுத்தப்பட்ட பேட்டரி கார்களை மீண்டும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi