சேலம், ஜூலை 21: சேலம் பள்ளப்பட்டி பெரமனூர் அய்யனாரப்பன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி(53). இவர் கடந்த 17ம்தேதி, 40 அடி ரோட்டை கடந்தார். அப்போது டூவீலரில் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை பார்த்து போகுமாறு கந்தசாமி கூறியுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், வாலிபர் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கினார். இதில் காயம் அடைந்த கந்தசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் உள்ள நாராயணசாமிபிள்ளை தெருவை சேர்ந்த தமிழரசன்(எ) இம்மானுவேல்(21) என்பவரை கைது செய்தனர்.
முதியவரை தாக்கிய வாலிபர் கைது
42