நெல்லை,நவ.10:களக்காடு அருகே வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (73). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகம் (46) என்பவர், மாடுகளின் கழிவுகளை நாராயணன் வீட்டு முன்புள்ள கால்வாயில் கொட்டினாராம். இதை நாராயணன் கண்டித்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், நாராயணனை தாக்கிகொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு எஸ்ஐ கார்த்திக் மற்றும் போலீசார், தாக்குதல் நடத்திய ஆறுமுகத்தை கைது செய்தனர்.