வீரவநல்லூர், ஜூன்18: வீரவநல்லூர் யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாதுரை (62). இவரை அதே பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் இசக்கிபாண்டி (26) என்பவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அய்யாதுரை பின்னர் இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த வீரவநல்லூர் போலீசார், கல்லால் தாக்கிய இசக்கிபாண்டியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
முதியவரை கல்லால் தாக்கியவர் கைது
0