தூத்துக்குடி, ஏப். 26: தூத்துக்குடியில் முதியவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (52). இவரது வீட்டின் அருகே நேற்று வாடித்தெருவை சேர்ந்த சக்திவேல் (21) மற்றும் அவரது நண்பர்கள் இருவர் நின்றிருந்தனர். அப்போது இசக்கிமுத்து, சக்திவேலிடம் இங்கு ஏன் நிற்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இசக்கிமுத்துவிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் எஸ்ஐ கங்கைநாத பாண்டியன் வழக்கு பதிந்து சக்திவேலை கைது செய்தார். சக்திவேல் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 5 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.