மேட்டூர், ஜூன் 10: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜூன் 12ம் தேதி மேட்டூர் வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணையின் மேல்மட்ட மதகு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்விசையை இயக்கி, குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விடுகிறார். இதற்காக அணையின் வலது கரையில் நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பாதுகாப்பு பணிகள் குறித்து சேலம் மாவட்ட எஸ்பி சிவகுமார், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் ஆகியோர் பார்வையிட்டனர். நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு மற்றும் விழா மேடை அமைய உள்ள இடம் குறித்தும் ஆலோசனை செய்தார். காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் பொழுது நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தியும் துவங்கும். அணையின் வலது கரையில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.